அச்சுறுத்தலாக மாறி வரும் வடமாநிலத்தவர்கள்... உழைப்பாளியா, கொள்ளையனா என கண்டுபிடிப்பதில் சிக்கல்!

தமிழகத்தில் எல்லாத் துறைகளிலும் வடமாநிலத்தவரின் வருகை என்பது நாளுக்கு நாள் கணக்கிட முடியாததாக மாறி வருகிறது. இவர்களில் கொள்ளையர்கள் யார், பிழைப்பு தேடி வருபவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதில் மிகப்பெரிய சிக்கல் நீடிக்கிறது.
தமிழகத்தில் வடமாநிலத்தவர் பணியாற்றுவது என்பது ஓட்டல், அழகு நிலையங்கள் என்று தான் தொடக்க காலத்தில் தொடங்கியது அவர்களின் வருகை. மொழி புரியாது, சொல்வதைச் செய்வார்கள், பல மணி நேரம் வேலை வாங்கலாம் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூர் மக்களின் வேலைகளை பறித்து வடமாநிலத்தவர்க்கே வழங்கி வந்தனர் முதலாளி வர்க்கத்தினர்.

இதனையடுத்து கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள் வடமாநில ஆட்களை பணியில் அமர்த்தத் தொடங்கின. கோவை, திருப்பூர் பகுதிகளிலும் வடமாநிலத்தவரின் நடமாட்டம் என்பது தற்போது அதிகரித்துள்ளது. பனியன் கம்பெனிகள், தொழிற்சாலைகளில் இவர்கள் பணியாற்றி வருகின்றனர். இளைஞர்கள், குடும்பத்துடன் வந்து தங்கி பணியாற்றுதல் என்று இவர்களின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணமே உள்ளது.
தகவல் இல்லை
எந்த மாநிலத்தவரும் எங்கும் சென்று பணியாற்றலாம் இதில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது தான். ஆனால் வடமாநிலத்தவரின் வருகையால் உள்ளூர் மக்களின் பிழைப்பு பறிபோனது. மற்றொரு புறம்இவர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் இல்லை. எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள், எங்கிருந்து வந்திருக்கிறார்கள் என்ற எந்த தகவலும் இல்லை.
திட்டமிட்டே வரும் வடமாநிலத்தவர்
தமிழகத்தின் பெரும்பாலான தொழில் நகரங்களில் இவர்கள் படர்ந்து விட்டனர். வெளி மாநிலத்தவரின் வருகைக்கேற்ப கொள்ளை சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சிலர் திட்டமிட்டே இங்கு வந்து கொள்ளையடித்து செல்லும் கதையும் நடந்துள்ளது. அண்மையில் சென்னை கொளத்தூரில் நடந்த கொள்ளையும் அப்படித் தான்.
ராஜஸ்தானியர்களின் பகை
கொளத்தூரில் நகைக்கடை நடத்தி வந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர், அவரின் அதே கிராமத்தை சேர்ந்தவர் தான் நாதுராம். இவர் சென்னைக்கு வந்து தன்னுடைய ஆட்களை வைத்து திட்டமிட்டு நகைக்கடையை மேலிருந்து துளையிட்டு தங்கம், வெள்ளியை கொள்ளையடித்து விட்டு, பின்னர் சொந்த மாநிலத்திற்கு மனைவி மூலம் கொள்ளையடித்தவற்றை எடுத்துச் சென்று அவரும் அங்கேயே போய் செட்டில் ஆகி விட்டார்.
கண்டுபிடிக்க முடியவில்லை
இவரைபிடிக்கச் சென்ற போது தான் தமிழக போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொள்ளை மட்டுமல்ல முதன்முதலில் 2012ல் மடிப்பாக்கத்தில் நடைபெற்ற வங்கிக்கொள்ளை, இதுவரை துப்பு கிடைக்காமல் தொடர்ந்து கொண்டிருக்கும் ஓடும் ரயிலில் திருடப்பட்ட ரூ. 300 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் கொள்ளை என்று கொள்ளை பட்டியல் தொடர்கிறது.
அடையாளம் காண முடியவில்லை
தமிழகத்தில் வந்து பணியாற்றும் பெரும்பாலான வடமாநிலத்தவர் பற்றிய சரியான தகவல் யாரிடமும் இல்லை. பிரச்னை வரும் போது மட்டும் வடமாநிலத்தவரின் விவரங்களை அருகில் உள்ள காவல்துறையிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் படையெடுக்கும் இந்த வடமாநிலத்தவரை கட்டுப்படுத்துவது எப்படி, இவர்களில் உழைப்பாளி யார், கொள்ளையன் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு முறையான எந்த சி*டமும் இல்லை.
உடனடி தேவை
இந்த நடைமுறை சிக்கல்களுக்கு காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது. இவர்களில் பலர் துப்பாக்கி, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை தாராளமாக பயன்படுத்துகின்றனர் இதனை எப்படி கட்டுப்படுத்தப் போகிறார்கள். காடு, மேடு, கழனிகளில் சுற்றித் திரிந்தவர்கள் என்பதால் அவர்கள் திட்டம் போட்டு வந்து கொள்ளையடித்து விட்டு ரயில், பஸ் ஏறி சென்று விடுகின்றனர். வட இந்தியக் கொள்ளையர்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது இருக்கிறது தமிழகம். விழிக்குமா அரசு.