ஏர்செல் நெட்வார்க் பயன்படுத்துவர்கள் இதனை செய்யுங்கள்..!

நாடு முழுவதும் 90 சதவீத ஏர்செல் இணைப்புகள் இன்று இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் சிரமத்திலிருந்து தப்பிக்க எளிய வழியும் உள்ளது.
ஏர்செல் மொபைல் சிக்னல் கடந்த சில வாரங்களாக தடைபட்டது. இதனால், அதன் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே நேற்று அதன் பாதிப்பு சற்று அதிகமாகவே இருந்தது. சென்னையிலும் பல இடங்களில் ஏர்செல் சிக்னல் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்தியா முழுவதும் இன்று 90 சதவித ஏர்செல் இணைப்புகள் இன்று இயங்காது என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஒரேயொரு எஸ்எம்எஸ் அனுப்பி வேறு நிறுவன மொபைல் சேவைக்கு தங்களது எண்ணை மாற்றி சிரமத்திலிருந்து தப்பிக்கலாம். அதன்படி ஏர்செல் வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டுவது என்னவென்றால், தங்களது மொபைல் செட்டிங்கில், நெட்வொர்க் செட்டிங் சென்று அங்கு நீங்களாகவே (Manually) நெட்வொர்க் சர்ச் செய்ய வேண்டும். அதில் காண்பிக்கப்படும் நெட்வொர்க்கில் ஏர்டெல் 2ஜியை தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர், PORT என டைப் செய்து, அத்துடன் உங்கள் மொபைல் எண்ணையும் சேர்த்து டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு அனுப்பினால் போதுமானது. இதனால் மொபைல் போர்ட்டபிளிட்டி எண் உங்களுக்கு 24 மணி நேரத்தில் கிடைக்கும். அந்த எண் மூலம், நீங்கள் ஏர்டெல் மொபைல் சேவைக்கு மாறலாம். ஆனாலும் உங்ளது மொபைல் எண் மாறாது. பின்னர் வழக்கம்போல உங்களது எண்ணை நீங்கள் பயன்படுத்த தொடங்கலாம். இருப்பினும் இந்த சேவையிலும் பல குறைபாடுகள் நிலவுகிறது. எஸ்எம்எஸ் செல்வதில்லை. மொபைல் போர்ட்டபிளிட்டி எண் கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் புலம்பித் தவிக்கின்றனர்.

No comments:

Post a Comment