உணவு இடைவேளைக்கு 3 நிமிடம் முன்னதாக சென்றதால் சம்பளம் பிடிப்பு

ஜப்பானில் மதிய உணவு இடைவேளைக்கு 3 நிமிடங்கள் முன்னதாக சென்றதால் ஊழியர் ஒருவரின் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

ஜப்பான் நீர்பணித்துறையில் பணியாற்றும் 64 வயது நபர், மதிய உணவு இடைவேளைக்காக 3 நிமிடங்கள் முன்னதாக சென்றுள்ளார். பொதுவாக அந்நிறுவனத்தின் உணவு இடைவேளை மதியம் 12 மணி முதல் 1மணி வரையாகும். 

இவர் 3 நிமிடங்கள் முன்னதாக சென்றதை அந்நிறுவன அதிகாரி பார்த்து உள்ளார். இதையடுத்து அவருக்கு அரைநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த 7 மாதங்களில் மட்டும் இப்படி 26 முறை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். 


அவ்வாறு ஊழியர் வேலை நேர தாமதமாக வந்ததாக கூறி சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்வை அப்படியே நிறுத்தியிருந்தால் பெரிய சர்ச்சை ஆகியிருக்காது. ஆனால் அந்நிறுவன 4 அதிகாரிகள் அந்நாட்டு ஊடகத்தில் தோன்றி நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவித்தனர். அதன் பின் இந்த விவகாரம் நாடு முழுவதும் பரவி கடும் கண்டனத்தை பெற்றது.

பணி இடைநீக்கம் அதேபோல் மற்றொரு நிறுவனம், தனது ஊழியர் ஒருவர் ரெடிமேட் மதிய உணவை வாங்கப் பலமுறை பணி நேரத்தில் சென்றுள்ளதை நிர்வாகம் கணக்கிட்டுள்ளது, இதில் அவர் 6 மாதத்தில் சுமார் 55 மணிநேரம் பணியில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டுப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்

No comments:

Post a Comment