பிபிஎப், என்எஸ்சி சிறு சேமிப்பு திட்டங்கள் வட்டி விகிதத்தினை 0.40% வரை உயர்த்தி மத்திய அரசு அதரடி!

மத்திய அரசு அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான மூன்றாம் காலாண்டில் பிபிஎப், செல்வ மகள் திட்டம் போன்றவற்றின் மீதான வட்டி விகிதத்தினை 0.40 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்துள்ளது. 

கடந்த இரண்டு காலாண்டுகளாகச் சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை மத்திய அரசு உயர்த்தாமல் இருந்து வந்த நிலையில் தற்போது உயர்த்தி இருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய நிதி அமைச்சகம் புதன் கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை 0.30 சதவீதம் முதல் 0.40 சதவீதம் வரை உயர்த்துவதாகத் தெரிவித்துள்ளது. 


ஒரு வருட இரண்டு வருட டைம் டெபாசிட் திட்டங்கள் மீதா வட்டி விகிதம் 0.30 சதவீதமும், செல்வ மகள் திட்டம், பிபிஎப் போன்ற திட்டங்களுக்கு 0.40 சதவீதம் வரை வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளனர். எனவே அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை எந்தத் திட்டங்களுக்கு எவ்வளவு வட்டி விகிதத்தினை மத்திய அரசு அளிக்க இருக்கிறது என்ற விரிவான தகவல்களை இங்குப் பார்க்கலாம். 

டைம் டெபாசிட் திட்டங்கள் 1 வருட டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது 6.6 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அக்டோபர் 1 முதல் 6.9 சதவீதம் லாபம் கிடைக்கும். 

2 வருட டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது 6.7 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அக்டோபர் 1 முதல் 7.0 சதவீதம் வட்டி விகித லாபம் அளிக்கப்படும். 

3 வருட டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும்போது 6.9 சதவீத வட்டி விகிதம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அது 7.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

4 வருட டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்த போது 7.4 சதவீத வட்டி விகித லாபம் அளித்து வந்த நிலையில் 7.8 சதவீதமாக வட்டி விகித உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 5 வருட டைம் டெபாசிட் திட்டத்தில் 6.9 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அக்டோபர் 1 முதல் 6.9 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.  
5 வருட மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்  
5 வருட மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மூத்த குடிமக்களுக்கான இந்த 5 வருட சேமிப்புத் திட்டத்தில் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 8.3 சதவீத லாபம் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை 8.7 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். 5 வருட மாதாந்திர வருவாய் கணக்கு 5 வருட மாதாந்திர வருவாய் திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 8.3 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 8.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

5 வருட தேசிய சேமிப்புப் பத்திரம் 5 வருட தேசிய சேமிப்புப் பத்திரம் அரசு பத்திர திட்டங்களின் வருவாய் அதிகரித்துள்ள நிலையில் 7.6 சதவீதமாக இருந்து வந்த வட்டி விகிதம் 8.0 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 
பிபிஎப் பிபிஎப் பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிபிஎப் திட்டத்தில் முதலீடு செய்யும் போது 7.6 சதவீதமாக இருந்து வந்த வட்டி விகிதம் 8.0 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்ரா கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 7.3 சதவீதம் லாபம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அது 7.7 சதவீதமாக உயர்த்துப்பட்டுள்ளது. 

அதுமட்டும் இல்லாமல் 118 நாட்கள் முதிர்வு என்று இருந்தது 112 நாட்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது. செல்வ மகள் திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வ மகள் திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு 8.1 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அக்டோபர் காலாண்டில் 8.5 சதவீத லாபம் கிடைக்க உள்ளது. சேமிப்பு கணக்கு தபால் நிலைய சேமிப்புக் கணக்கில் உள்ள இருப்பு தொகைக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் எந்த மாற்றமும் செய்யவில்லை. 

No comments:

Post a Comment