
ஜப்பான் நாட்டு மக்கள் இரவில் தூங்கும் நேரம் குறைத்துக்கொண்டு சமூக ஊடகங்களில் அதிகமாகக் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் மறுநாள் காலையில் அவர்களால் பணியில் கவனத்துடன் ஈடுபடமுடியவில்லை என்ற புகார் நீண்ட நாட்களாக தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனால் நிறுவனங்களில் உற்பத்தியும், வேலையும் பாதிக்கிறது. இதைத் தடுக்கும் முயற்சியில் இந்தத் திட்டத்தை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்காக பிரத்யேகமாக ஆப் ஒன்று வடிவமைத்துள்ளனர். அந்த ஆப் மூலம் ஊழியர்களின் தூங்கும் நேரத்தை கணக்கிடப்படுகிறது. அதற்கு பின்னர் ஆண்டுக்கு ரூ.42 ஆயிரம் வரை போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணத்தின் மூலம் நிறுவனத்துக்கு சொந்தமான கேண்டீனில் ஆண்டுக்கு ரூ.48 ஆயிரம் வரை சாப்பிட்டுக்கொள்ள முடியும். அல்லது பணமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment