இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகத்தில் தொழிலாளர் துறை இணை ஆணையர் அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகள், தீபாவளியையொட்டி தனியார் நிறுவன நிர்வாகிகளிடமிருந்து பரிசுப் பொருள்களும், பணமும் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வந்தன.
அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த அலுவலக அதிகாரிகள் சிலர் பரிசுப் பொருள்கள், பணமும் வாங்குவது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர், அந்த அலுவலகத்தில் புதன்கிழமை மாலை திடீரென சோதனை நடத்தச் சென்றனர். டி.எஸ்.பி. லவக்குமார் தலைமையிலான 15 போலீஸார் அந்த அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் அந்த அலுவலகத்தில் இருந்த அனைத்து ஊழியர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சோதனைக்கு பின்னரே ஊழியர்கள் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இச்சோதனை நள்ளிரவை கடந்தும் நீடித்தது.",
No comments:
Post a Comment