எந்த வேலையும் இனி நிரந்தரம் இல்லை!!


Image result for contract workerஎல்லா தொழில் துறைகளிலும் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் எந்த வேலையும்  நிரந்தரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.வேலை தேடுவோருக்கு எந்த வேலையும் இனி நிரந்தரம் இல்லை, ஒப்பந்த பணி, குறிப்பிட்ட காலகட்டத்திற்கான பணி ஆகியன எல்லா துறைகளிலும்  மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில் தற்காலிக பணியாளர்களை 2 வாரம் முன்னதாக நோட்டீஸ் கொடுத்து அவர்களை  பணியில் இருந்து நீக்கம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவுகளை மத்திய தொழில்துறை பிறப்பித்துள்ளது. நிரந்தர வேலை வழங்க வேண்டிய நடைமுறைகளை தவிர்த்து  பெருமுதலாளிகளுக்கு உதவும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் தற்போதுள்ள நிரந்தர தொழிலாளர்களை புதிய உத்தரவின் அடிப்படையில் குறிப்பிட்ட காலம் மட்டும் பணி செய்யும் ஒப்பந்த  தொழிலாளியாக மாற்ற தொழில் நிறுவனங்களுக்கும், அதன் முதலாளிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்ைல. இது தொடர்பாகவும் உத்தரவில்  தனியே குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு, ஆடை உற்பத்தி சார்ந்த துறைகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த ஒப்பந்த அடிப்படையிலான  வேலைவாய்ப்பு இனி எல்லா தொழில், வணிக துறைகளிலும் செயல்பாட்டிற்கு வரும்.மத்திய தொழில்துறை அமைச்சகம் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. 1946ம் ஆண்டுள்ள தொழில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு புதிய  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளிலும், தொழில் நிறுவனங்களிலும் இனி நிரந்தர நிலையில் உள்ள வேலைக்கு கூட குறிப்பிட்ட கால அளவுக்கு மட்டும்  தொழிலாளர்களை நியமிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தொழிலாளியும், முதலாளியும் ஒப்பந்த கடிதம் வாயிலாக உறுதி செய்துகொள்ள  வேண்டும் என்பது ஆகும். வேலை, சம்பளம், சலுகைகள் ஆகியவற்றில் நிரந்தர தொழிலாளியையும், தற்காலிக தொழிலாளியையும் ஒரே அடிப்படையில் பாவிக்க வேண்டும்.  குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லையெனில் தொடர்ந்து தொழிலாளி பணிபுரியவும், சம்பளம் பெறவும் தகுதி இல்லாதவர்  ஆகிவிடுவார். மூன்று மாதங்களுக்கு மேல் பணிபுரிந்திருந்தாலும் தற்காலிக பணியாளர்களை இரண்டு வாரம் முன்னதாக நோட்டீஸ் வழங்கி பணியில்  இருந்து விலக்கிவிடலாம் என்பதற்கு முதலாளிக்கு அதிகாரம் உண்டு என்பது தொடர்பான விபரங்கள் பாராளுமன்றத்தில் பரிசீலனைக்கு கொண்டு  செல்லப்படாமல் உத்தரவு அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 100 தொழிலாளர்களுக்கு அதிகம் உள்ள நிறுவனங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க சட்டம் அனுமதிக்கவில்லை என்ற போதிலும்  இனி அதுபோன்ற நிலை ஏதும் இல்லை. ஆனால் அதனையும் மீறி தகவல் தொழில்நுட்ப துறையில் ஒப்பந்த பணியாளர்கள் நியமனங்கள் நடைபெற்று வந்தது. பெருமுதலாளிகள் கொடுக்கின்ற  அழுத்தம் காரணமாக மத்திய அரசு இதுபோன்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டி வருகின்ற நிலையில் புதிய  வேலை தேடுகின்ற இளைஞர்களையும் இந்த சட்டம் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment