இந்தியாவில் ஒரே வருடத்தில் 324% புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு.. அதிர்ச்சி தகவல்.. தடுப்பது எப்படி?


  இந்தியாவில் ஒரே வருடத்தில் 324% புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு |Cancer cases rise by over 324% in 1 year
  டெல்லி: இதய நோய்களுக்குப் பின்னால் உலகளவில், புற்றுநோய்தான், அதிகப்படியான உயிரை குடிக்கும் வியாதியாக உருவாகியுள்ளது.
  பெண்களுக்கு மார்பக புற்றுநோய், ஆண்களுக்கு நுரையீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் அதிகமாக தாக்குகிறது.
  2017 மற்றும் 2018க்கு இடைப்பட்ட காலகட்டத்தில், வாய்வழி, கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய்கள் 324% அதிகரித்துள்ளன என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வு தேசிய சுகாதார ப்ரஃபைலால் நடத்தப்பட்டது.
  2018 ஆம் ஆண்டில், மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்ற 6.5 கோடி பேரில், ஏறக்குறைய 1.6 லட்சம் பேர் மேற்கூறிய புற்றுநோய் வகைகளில் ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
  கிளினிக்கிற்கு வருகை தரும் மொத்த மக்கள் தொகை 2017-2018 ஆம் ஆண்டில் இரட்டிப்பாகியுள்ளது. அதாவது 3.5லிருந்து 6.6 கோடியாக உயர்ந்துள்ளது.
  உணவு மாசு

  உணவு மாசு

  வாழ்க்கை முறை மாற்றம், சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் உணவில் புற்றுநோய்களின் குறிப்பிடத்தக்க உற்பத்தி காரணியாக உள்ள நைட்ரோசமைன்கள் போன்றவை, இந்த நோய், அதிகரிப்பதற்கான காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், உணவு மாசுபடுவதும் ஒரு காரணம். பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயன உரங்கள் போன்றவை, உணவை நஞ்சாக்குகின்றன.
  கொழுப்பை குறைக்கவும்

  கொழுப்பை குறைக்கவும்

  முக்கியமாக மருத்துவர்கள் கூறும், ஒரு காரணி கொலஸ்ட்ரால். கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் உடலின் திறனும் அதிகரிக்கும்.
  குஜராத்தில் அதிகம்

  குஜராத்தில் அதிகம்

  இந்தியாவில், குஜராத்தில் 2018 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான புற்றுநோய் பதிவாகியுள்ளன. நிறைய சர்க்கரை மற்றும் saturated oils உள்ள உணவு இதற்கு ஒரு காரணம். கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை இதற்கு அடுத்த பட்டியலில் வரும் மாநிலங்களாகும். குஜராத்தில், ஒரு வருடத்தில் 3900 முதல் 72169-ஆக நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  தடுப்பு நடவடிக்கை

  தடுப்பு நடவடிக்கை

  மூத்த புற்றுநோயியல் நிபுணர் ஹர்பிரீத் சிங், கூறுகையில், புகையிலை நுகர்வு மற்றும் சிகரெட் புகைத்தல் ஆகியவை புற்றுநோய்களை அதிகரிக்கின்றன. அவ்வாறு செய்வது வாய்வழி, நுரையீரல் புற்றுநோய்களுக்கு காரணமாகிறது. பெண்களில், மார்பக புற்றுநோயை ஒழிக்க, குழந்தைக்கு தவறாமல் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். நடுத்தர வயதை தாண்டிய பெண்கள், கட்டாயமாக, மேமோகிராபி சோதனைகளை செய்துகொள்ள வேண்டும்.
  உடல் பயிற்சி அவசியம்

  உடல் பயிற்சி அவசியம்

  புகையிலை மட்டுமல்ல, சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது, மற்றும் உடல் பருமன் ஆகியவற்றால் புற்றுநோய் விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. பல நீண்ட கால உயர் ரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவுகளால் ஏற்படும் வளர்சிதை மாற்றமும், புற்றுநோய் அதிகரிப்புக்கு காரணம். எனவே மேற்கூறிய காரணங்களை தடுக்க, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது, கொழுப்பை குறைப்பது, இயற்கை முறையில் விளைந்த உணவுகளை சாப்பிடுவது போன்றவையெல்லாம், புற்றுநோய் வராமல் தடுக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

  No comments:

  Post a Comment