தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவி, ஊக்கத்தொகை: விண்ணப்பம் செய்ய அழைப்பு

தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும், தொழிலாளர் நலவாரியத்துக்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகை, கல்வி ஊக்கத்தொகை, பாடநூல் உதவித்தொகை வழங்கும் திட்டம் உள்ளது
Image result for scholarship"அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து, 25 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறும் தொழிலாளர்கள், இதில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித்தொகையாக, ஒவ்வொரு கல்வியாண்டுக்கும், பட்டய படிப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை, 5,000 ரூபாய் முதல், 12 ஆயிரம் ரூபாய் வரை, மேல்நிலை கல்வி, தொழிற்பயிற்சி கல்விக்கு, 4,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில்லாமல் அரசு பொது தேர்வில் முதல், 10 இடங்களுக்குள் பெறும் குழந்தைகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி., வகுப்புக்கு, 2,000 ரூபாய், பிளஸ்2 வகுப்புக்கு, 3,000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. புத்தகம் வாங்க, உதவித்தொகையாக மேல்நிலை கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை, 1,000 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இத்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள், தாங்கள் பணிபுரியும் நிறுவனம் மூலம், டிச.,31க்குள், 'செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம், அஞ்சல் பெட்டி எண்: 718, தேனாம்பேட்டை, சென்னை-6' என்ற முகவரிக்கு அனுப்பி பயன்பெறலாம். இத்தகவலை, ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் பாலதண்டாயுதம் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment