ஜிஎஸ்டி வரியிலிருந்து ஜாப்-ஒர்க் நிறுவனங்களுக்கு முழுவிலக்கு அளிக்க சைமா கோரிக்கை

சைமா சங்கத்தின் தலைவர் வைக்கிங் ஈஸ்வரன், பொதுசெயலாளர் பொன்னுசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் பகுதியில் கடந்த 100 ஆண்டுகளாக பின்னலாடை உற்பத்தி நடந்து வருகிறது. பின்னலாடை உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களில் 8 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். பணம் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. மற்றும் பல்வேறு சலுகைகள் குறைப்பு ஆகியவற்றால் பின்னலாடை நிறுவனங்கள் கடந்த இரு ஆண்டுகளாக பல்வேறு தொழில் நெருக்கடியில் சிக்கியுள்ளது. பின்னலாடை சார்ந்த உற்பத்தி நிறுவனங்கள் வேலை பளுவை குறைக்க தொழில் தெரிந்த தொழிலாளிகளுக்கு ஜாப்-ஒர்க் கொடுக்கப்படுகிறது.
இவர்கள் குடும்ப உறுப்பினர்களின் துணையோடு ஆடை தைக்கின்றனர். பெரும்பாலும் பெண் தொழிலாளர்கள் அதிகளவு ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம் ஜி.எஸ்.டி. என பிடித்தம் செய்வதால் உழைப்பு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். பின்னலாடை நிறுவனங்களிலிருந்து துணிகளை வாடகை வண்டியில் எடுத்துவந்து தைத்த பின் மீண்டும் பின்னலாடை நிறுவனங்களுக்கு அனுப்புகின்றனர். வாடகை செலவு, ஜி.எஸ்.டி. என கூடுதல் செலவுகளால் ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பின்னலாடை சார்ந்த ஜாப்-ஒர்க் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment