இன்னும் 9 மாசம் தான்..! ரெசசன் கன்பார்ம்..!

சமீபத்தில் தான் பேங்க் ஆஃப் அமெரிக்கா மேரில் லிஞ்ச் நிறுவனத்தின் குளோபல் ஃபண்ட் மேனேஜர் சர்வே எடுக்கப்பட்டது. அதில் 224 பெரிய முதலீட்டார்கள் பங்கெடுத்தார்களாம்.
அதில் 34 சதவிகிதம் முதலீட்டாளர்கள், அடுத்த ஒரு வருடத்துக்குள் ஒரு பெரிய ரெசசன் வரும் என்கிறார்களாம்.
ஏற்கனவே மார்கன் ஸ்டான்லி நிறுவனம் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போர் காரணமாக அடுத்த ஒன்பது மாதங்களுக்குள் ஒரு ரெசசன் வரும் என ஆரூடம் சொல்லி இருக்கிறது.
இங்கிலாந்து
 இங்கிலாந்து
உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் இருந்து வரும் பொருளாதார டேட்டாக்கள் அத்தனை சிறப்பாக இல்லை என்கிறார்கள். இங்கிலாந்தின் பொருளாதாரம் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து முதல் முறையாக 0.2% குறைந்து இருக்கிறதாம். ஜெர்மனி நாட்டில் ஜிடிபி வளர்ச்சி 0.1 சதவிகிதம் சரிந்திருக்கிறதாம். சரி இதை எல்லாம் விடுங்கள் சின்ன சின்ன டேட்டாக்கள் தான். அதுவும் 0.1% 0.2% சரிவுகள். ஆனால் சீனாவில் கதையே வேறு.
சீனா பிரச்னை

சீனா பிரச்னை

உலகின் உற்பத்தி கேந்திரம் போல செயல்பட்டு வந்த சீனாவின் தொழிற் துறை, கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தொழிற் துறை உற்பத்தி கடந்த ஜூலை 2019-ல் சரிந்து இருக்கிறது. அதோடு முதலீடுகளும், சில்லறை வணிகமும் வேகம் குறைந்து இருப்பதாக சீனாவின் அதிகாரபூர்வத் தரவுகள் சொல்கின்றன. அமெரிக்க சீன வர்த்தகப் போரால் எப்படிப்பட்ட பலத்த அடிகளை வாங்கி இருக்கிறது என்பதற்கான சாட்சி என்கிறார்கள் அனலிஸ்டுகள்.
தொழிற்துறை உற்பத்தி

தொழிற்துறை உற்பத்தி

சீனாவின் தொழிற் துறை உற்பத்தி கடந்த ஜூன் 2019-ல் காட்டிய 6.3 சதவிகித வளர்ச்சியை காட்டியதாம். தற்போது அதை விட 1.5 சதவிகிதம் குறைந்து, ஜூலை 2019-ல் 4.8 சதவிகித தொழிற் துறை உற்பத்தியைத் தான் காட்டி இருக்கிறதாம். சீனாவில் சில்லறை விற்பனை கடந்த ஜூன் 2019-ல் 9.8 சதவிகிதம் அதிகரித்திருந்ததாம். ஆனால் தற்போது ஜூலை 2019-ல் இந்த சில்லறை விற்பனை 7.6 சதவிகிதமாக குறைந்து இருக்கிறதாம்.
30 ஆண்டுக
 

30 ஆண்டுக

சீனத் தலைவர்கள், தங்கள் பொருளாதாரத்தை ஏற்றுமதி மற்றும் அரசு முதலீடு சார் பொருளாதாரத்தில் இருந்து, உள்நாட்டு நுகர்வு சார் பொருளாதாரமாக மாற்றப் போராடும் போராட்டத்தை இந்த தரவுகள் காட்டுவதாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள். மிகக் குறிப்பாக சீனாவின் ஜிடிபி வளர்ச்சி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஜூன் 2019 காலாண்டில் 6.2 சதவிகிதமாக இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள் அனலிஸ்டுகள்.
ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல்

சமீபத்தில் தான் ஆட்டோமொபைல் துறையில் சுமாராக 300 வாகன டீலர்கள் தங்கள் கடைகளை இழுத்து மூடினார்கள். இந்த ரெசசன் 32,000 பேரை வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். மாருதி சுசூகி நிறுவனத்தில் 3,000 ஒப்பந்த ஊழியர்கள் இந்த ரெசசனால் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறது. அசோக் லே லாண்ட் நிறுவனம் 40 வயதுக்கு மேல் உள்ள பணியாளர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு கொடுக்கிறார்கள். இந்திய ஆட்டோமொபைல் உதிரிபாக தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த சிக்கலால் சுமாராக 10 லட்சம் பேர் வரை வேலை பறி போகலாம் எனச் சொல்லி இருந்தது.
இப்படி இந்தியாவிலேயே இதன் தாக்கத்தை பகிரங்கமாகப் பார்க்க முடிகிறது. இன்னும் இந்தப் பட்டியலில் எத்தனை பேர் பாதிக்கப்படப் போகிறார்களோ தெரியவில்லை

No comments:

Post a Comment