
வருடாந்திர 'பிபாக்' நிகழ்வில் பேசிய எஸ்பிஐ சேர்மன் ரஞ்னிஷ் குமார், " தற்போது 90 கோடி டெபிட் கார்டுகளும் 3 கோடி கிரெடிட் கார்டுகளும் பயன்பாட்டில் இருக்கின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் டெபிட் கார்டு இல்லாத டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்கிற நோக்கில், அனைத்து டெபிட் கார்டுகளையும் எலிமினேட் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்.
டெபிட் கார்டுகளுக்குப் பதிலாக, Yono ஆன்லைன் பிளாட்பார்ம் மூலமாகப் பணப் பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளலாம். டெபிட் கார்டு இல்லாமலேயே யோனோ கேஷ்பாயின்ட் வழியாக, ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியும், பொருள் வாங்கினால் பணம் செலுத்த முடியும். எஸ்பிஐ சார்பில் ஏற்கெனவே, 68,000 யோனோ கேஷ் பாயின்ட்டுகளைத் திறந்துள்ளோம். அடுத்த 18 மாதங்களில் இதை 10 லட்சத்துக்கும் அதிகமாக உயர்த்த உள்ளோம்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைவான அளவுக்கு மட்டுமே பிளாஸ்டிக் கார்டுகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். தற்போது க்யூ.ஆர் கோடு (QR Code) மூலமான பரிவர்த்தனையை மக்கள் பின்பற்றி வருகிறார்கள். இந்த முறை ஊக்கப்படுத்தப்படும்" என்றார் உறுதியாக.
No comments:
Post a Comment