தற்போது இதுபோன்ற நடைமுறைகளுக்கு பல்வேறு விண்ணப்பங்கள் நிரப்பப்பட வேண்டியது உள்ளன. எனவே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஐடி துறைக்கு அது மரண காலாண்டு தான்.. கதறும் ஊழியர்கள்.. கொதித்து எழும் நிறுவனங்கள்..!
இரு வகை விண்ணப்பம்
ஸ்பைஸ் பிளஸ் (Spice Plus) மற்றும் ஆகில் புரோ (Agile Pro) ஆகிய இருவகையான விண்ணப்பங்களை தொழில் விவகாரத்துறை அமைச்சகம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த இரண்டு படிவங்களும் GSTIN, PAN, TAN, ESIC, EPFO, DIN, வங்கி கணக்குகள் மற்றும் தொழில்முறை வரி உள்ளிட்ட அனைத்துக்குமான திறவுகோலாக அமைய உள்ளன.

ஈஎஸ்ஐ, பிஎப்
இந்த விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக நிரப்பப்பட கூடியவை. ஸ்பைஸ் பிளஸ் என்ற விண்ணப்பம் பெயர், இன்கார்பொரேஷன் போன்றவற்றுக்காக பயன்படுத்தப்படும். இன்கார்ப்பொரேஷன் செய்யக்கூடிய காலகட்டத்திலேயே, ESIC, EPFO ஆகியவற்றையும் செய்துவிடமுடியும்.

உலக வங்கி
சமீபத்தில் உலக வங்கி, உலகத்திலேயே எளிதாக தொழில் துவங்க வாய்ப்புள்ள நாடுகள் பட்டியலில், இந்தியாவுக்கு, 136 ஆவது இடத்தை கொடுத்தது. ஒரு தொழிலை துவங்குவதற்கு இந்தியாவில் குறைந்தபட்சம் 18 நாட்கள் தேவைப்படும். 10 வகையான வழிமுறைகளை தொழில்முனைவோர் பின்பற்ற வேண்டி இருக்கிறது என்று உலக வங்கி குறிப்பிட்டிருந்தது.
வங்கி பணி துரிதம்
இந்த நிலையில்தான், எளிமையாக, தொழில் துவங்குவது மத்திய அரசின் முக்கிய இலக்காக உள்ளது. இன்கார்ப்பரேஷன் பணிகளின்போது வங்கி கணக்கு துவங்க வேண்டும் என்பதற்காக, 8 வங்கிகளுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இந்த பணிகளை அந்த வங்கிகள் துரிதமாக செய்து கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment