வந்து விட்டது நவீன பயோ பேக்

மக்காத பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பால் பாலிதீன் உட்பட 14 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக இயற்கை மூலப்பொருட்களை கொண்டு மண்ணில் மக்கும் தன்மையுள்ள 'பயோ பேக்'குகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மண்ணில் மக்கி உரமாகும் பையாக உள்ளது பயோ பேக். பாலிதீன் தொழிலில் வேலைவாய்ப்பு இழந்த தொழிலாளர்கள் இதன் மூலம் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர். இதற்கு புதிதாக இயந்திரங்கள் தேவையில்லை. மூலப்பொருட்கள் மட்டுமே மாறுகிறது.10 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்யப்பட்டு இந்த பயோ பேக் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய , மாநில அரசுகள் ஆய்வு செய்து அனுமதி தெரிவித்துள்ளது.
பாலிதீன் தயாரிப்பாளர்கள் பலரும் பயோ பேக் உற்பத்தி செய்ய துவங்கி விட்டனர். மக்காச்சோளத்திலிருந்து பெறப்படும் ஸ்டார்ச் மற்றும் புரோட்டீன்களை கொண்டு உருவாகும் பயோ பேக் சிவகாசி சாத்துார் ரோட்டில் உள்ள கார்த்திக் பாலி பேக் குரூப்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது. ஓட்டல், ஜவுளி, திருமண தாம்பூல பை உட்பட அனைத்திற்கும் தேவைக் கேற்ற அளவில சிறியதும் பெரியதுமாக அவரவர் விருப்பத்தின் படி பெயர் பொறிக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது.இது தவிர கொரியர் பேக், புத்தகங்கள் , டைரிகள் உள்ளிட்டவைகள் வைக்க பயன்படுத்தப்படும் பேக்கும் தயாரிக்கப்படுகிறது. ''பாலிதீன் தடையால் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. தற்போது அறிமுகமாகி உள்ள பயோ பேக் மீண்டும் வேலை வாய்ப்பினை கொடுத்துள்ளது. மக்கும் தன்மை , உரமாகவும் பயன்படுவதால் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment