தமிழகத்தில் ஞாயிறன்று ரயில்கள், பேருந்துகள் இயங்காது!

22 ஆம் தேதி அரசுக் கழகப் பேருந்துகள் ஓடாது - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவும் மெல்ல பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. நேற்று வரை 166 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 223  ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில்,கொரோனாவால் இன்று மட்டும் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்தம் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிறது.
 
இதனிடையே, இத்தாலியை சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவர் ராஜஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில் இந்த கொரோனா வைரஸில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமெனில் அனைவரும் வரும் 22 ஆம்தேதி வீட்டிலேயே இருக்கும் படி, சுய ஊரடங்கு உத்தரவை  பிரதமர் மோடி நேற்று அறிவுறுத்தியிருந்தார்.
 
இந்நிலையில், கொரோனாவை தடுக்க பிரதமர் கூறியபடி வரும் 22 ஆம் தேதி 9 அம்ச நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து முதல்வர் கூறியுள்ளதாவது :
 
அரசுப் போக்குவரத்து கழகங்களின் பேருந்துகள் வரும் 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஓடாது என தெரிவித்துள்ளார். 
 
மேலும், வரும் ஞாயிறன்று காலை 7 மணி முதல்  இரவு 9 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது. எனவே வரும் ஞாயிறு அன்று ,பிரதமர் மோடி கூறியுள்ளபடி, மக்கள் அனைவரும் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

1 comment: 1. After this brings up its clients get entertained well with its premium services, the Russian Escorts in Agrais liable to increase the level of fun by its quality services dissimilar to get anywhere. So, let us forget everything and take pleasure in what you wait for a long time. Check our other Services...
  Russian Escorts in Agra
  Russian Escorts in Ahmedabad
  Russian Escorts in Ahmedabad
  Russian Escorts in Ahmedabad
  Russian Escorts in Ahmedabad

  ReplyDelete